Tuesday, 11 October 2011

கலக்கத்தில் தினகரன் ஊழியர்கள்.




நில அபகரிப்பு மோசடி போன்று, தினகரன் பத்திரிக்கை கேபிகே.குமரனிடமிருந்து அபகரிக்கப் பட்டது அனைவரும் அறிந்த்து. இப்போது பழைய தினகரனில் வேலை பார்த்த ஊழியர்கள் கடும் அச்சத்திலும் எப்போது வேலை போகுமோ என்ற பயத்திலும் உள்ளார்கள்.

பழைய தினகரனில் 15 ஆண்டுகாலம் வேலை பார்த்தவர்களுக்கெல்லாம் வெறும் 10 ஆயிரம்தான் சம்பளம்.  அவர்களுக்கு போன் பில் கூட கொடுப்பதில்லை. ஆனால் சன் நிர்வாகம் தினகரனை வாங்கிய பிறகு வேலைக்கு சேர்ந்த பலருக்கு 20 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை கொட்டிக் கொடுக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள் தினகர்ன் ஊழியர்கள்.  இப்போது வேலைக்கு சேர்ந்த எம்யுஜே என்ற அடைமொழியோடு சுத்தும் மோகனுக்கு ஐம்பதாயிரம் சம்பளம் கொடுத்து வருகிறார்கள். 

இதை எதிர்த்து கேள்வி கேட்டால் வேலையை விட்டு நீக்கப் படுவோம் என்ற அச்சத்தில் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.

No comments:

Post a Comment