Friday, 20 April 2012

கோயபல்ஸ்களின் பிரசாரம்!

கோயபல்ஸ்...
இந்த பெயரை வைகோவின் அரசியல் மேடைகளில் அதிகம் கேட்டிருக்கலாம். அவரே கோயபல்ஸ் பற்றி பல நேரம் தெளிவாகவும் விரிவாகவும் பேசியிருக்கிறார். பொய் ஒன்றையே முலதனமாக வைத்து பொய் பிரசாரம் செய்து வந்தவர், கோயபல்ஸ். அதனால்தான் இப்போதும் பொய் சொல்பவர்களை கோயபல்ஸ் என்று சொல்வதுண்டு.
இப்போது எதற்கு கோயபல்ஸ் பற்றி பேசுகிறேன் என்று நினைக்கிறீர்களா? சொல்கிறேன். தமிழகத்தில் நிறைய கோயபல்ஸ்கள் உண்டு. அதில் முதன்மையானவர் யார் என்பதை பல நேரங்களில் வைகோவே மேடையில் சொல்லியிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல... முத்துவேலர் பெற்ற பிள்ளை கருணாநிதிதான். அடுத்தவர் அவரால் பலனடைந்த திரு. டாக்டர் ஜவஹர் பழனியப்பன்.
ஏன் இப்படி சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா? 2010_ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23_ம் தேதி, குமுதம் அலுவலகத்தில் பணியில் இருந்த அதன் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநரான பா. வரதராசனை, அலுவலகத்திற்குள் புகுந்த போலீஸார் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். எதற்காக கைது செய்கிறோம் என்பது தெரியாமல், மேலிடத்தில் இருந்து தகவல் வரும் வரையில் வரதராசனுக்கு சென்னையை சுற்றிக் காட்டினார்கள். (அமெரிக்க ரிட்டன் ஜவஹர் பழனியப்பன் என்று நினைத்துவிட்டார்கள் போலும்...) இரண்டரை மணி நேரம் சென்னையை சுற்றிக் காட்டிய பின்னர் ஜவஹர்  பழனியப்பன் கொடுத்த பொய் புகாரி வழக்குப் பதிவு செய்தார்கள். ஆனால் கோர்ட்டில் நீதிபதி பா. வரதராசனை ஜாமீனில் விடுவித்தார்.
சதிகார கும்பல் அன்று இரவே கருணாநிதியின் பேரன்கள் நடத்தும் சனி டி.வியில்... சாரி... சன் டி.வி.யில் அமெரிக்க ரிட்டன் ஜவஹர் பழனியப்பனின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். அந்த பேட்டியில், ‘என் தந்தை எஸ்..பி. நடத்திய பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்த பார்த்தசாரதியும் அவரது மகனும் குமுதம் நிறுவனத்தை கொள்ளையடித்துவிட்டார்கள்என்று சொல்லியிருந்தார். இந்த பொய்யை உண்மையாக்குவதற்காக, சனி டி.வி.யில் திரும்ப திரும்ப ஒளிபரப்பினார்கள். சனி டி.வி.யில் ஒரு செய்தியை திரும்ப திரும்ப ஒளிபரப்பினாலே அது பொய் என்பதை மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
விஷயத்துக்கு வருவோம்.
இந்த கோயபல்ஸ்களின் சாயம் வெளுக்காமலா இருக்கும். இன்றைக்கும் அவர்கள் நமது பெயரில் போலியான பிளாக்கை நடத்தி மோசடி வேலையிலும் கோயபல்ஸ் வேலையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தூய்மைக்கு ஒரு வடிவம் எஸ்.ஏ.பிஎன்ற பெயரில் கோயபல்ஸ் ஜவஹர் பழனியப்பன் ஒரு புத்தகத்தை அவரின் தந்தை ஆசிரியர் ஏஸ்..பி.யின் நினைவாக வெளியிட்டார். (அவர் உயிரோடு இருந்த வரையில் அவரை பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாக்கியவர் என்பது தனிக்கதை. மருத்துவ கல்லூரியில் பெண்ணை ஏமாற்றியது. பின்னர் டவுட்டணில் நர்ஸை ஏமாற்றிய கதையெல்லாம் சிக்கிரம் அம்பலத்துக்கு வரும்)
அந்த புத்தகத்தில் பக்கம் 18_ல் உள்ள சில வரிகளை மட்டும் உங்களுக்கு அப்படியே தருகிறேன். இதை படித்த பின்னர் இந்த கோமாளி கோயபல்ஸ்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
‘‘எஸ்..பி. ஒரு முடிவுக்கு வந்தவரைப் போல் காணப்பட்டார். தன் மனைவியிடம் ‘‘நான் ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டேன்’’ என்றார்.
மனைவி ஆச்சரியமாக ‘‘என்ன தீர்மானம்?’’
‘‘என் நண்பர் பார்த்தசாரத்யிடம் நான் பேசினேன். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு புதிய தொழில் தொடங்கப்போகிறோம்.’’
1947, நவம்பர் மாதம், குமுதத்தின் முதல் இதழ் வெளிவந்தது. ’’
இதுதான் அந்த வரிகள். இதை எழுதிய அதே ஜவஹரின் வாய்தான் சனி டி.வி.யில்வேலைக்கு சேர்ந்தவர்என்று பி.வி.பி. பற்றி சொல்லியது. வடிவேலு பாணியில் சொல்வதானால் அது நாற வாய்.
கடவுள் பக்தி மிக்கவர்களான எடிட்டர் மற்றும் பப்ளிஷர் ஆகியோரிடம் நாம் வேண்டிக் கொள்வதெல்லாம், ‘பெரியோர்களே... இந்த பாவிகளை மன்னியுங்கள். இவர்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே செய்துவிட்டார்கள்.’’

No comments:

Post a Comment